சென்னை: கரூரில் நடிகரை பார்க்க போன ரசிகர் கூட் டம், மக்கள் கூட்டம் என கூட்டத்திற்கு சென்று கரூர் நெரிசலில் சிக்கி 41 அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. அங்குள்ள தலைமை மாவட்ட மருத்துவமனையும், மருத்துவ கல்லூரியும் உள்ளது. அங்கு எத்தனை மருத்துவர்கள், கல்லூரி விடுதிகளில் எத்தனை மருத்துவர்கள், நர்சுகள் இருந்திருப்பார்கள். அசாதாரணமான நிலை ஏற்படும்போது அந்த மருத்துவர்களை அரசு உதவிக்கு உடனே அழைப்பதுதானே நடந்துள்ளது. இது புரியாமல் அரசியலாக்குவது மிகவும் கவலைக்குரியதாகும்.
தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு சிகிச்சை பெற்றவர்களை காப்பாற்றியுள்ளது. அரசின் தீவிர செயல்பாடு இல்லாமல் இருந்திருந்தால் மேலும் பலர் உயிர் இழந்திருக்கக் கூடும். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், ஈரோடு நகரங்களில் இருந்து மருத்துவர்கள் குழு வந்திறங்கின. ஏராளமானவர்கள் இறந்ததால் மருத்துவமனையில் அசம்பாவிதங்கள் நிகழக்கூடாது என இரவில் பிரேத பரிசோதனை செய்து அவர்களின் குடும்பத்திடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், இரவில் எப்படி போஸ்ட்மார்டம் செய்யலாம் என தவெகவினர் குற்றச்சாட்டு கூறுவதையே தொழிலாக கொண்ட சிலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதை வலைத்தளங்களிலும் பரப்புகிறார்கள். இந்த விஷயத்தில் மருத்துவ விவரங்கள் கூட தெரியாமல் தவெகவினர் செயல்படுவதாக மூத்த மருத்துவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் உரிய அடிப்படை கட்டமைப்பு, வசதிகள் இருந்தால் இரவு நேரத்திலும் போஸ்ட்மார்டம் செய்யலாம் என்று ஒன்றிய குடும்பநலன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கூட தெரியாமல் தவெக நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவில் இரவு நேரத்தில் போஸ்ட்மார்டம் நடந்துள்ளதை கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து ஒன்றிய அரசின் குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறையின் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், சூரியன் மறைவுக்குப்பிறகு போஸ்ட்மார்டம் செய்வது தொடர்பாக ஒன்றிய குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறையின் பொது சுகாதார சேவை இயக்குனரத்தின் தொழிழ்நுட்ப குழு ஆய்வு செய்ததில் சில மருத்துவமனைகள் இரவு நேரத்தில் போஸ்ட்மார்டம் செய்வது தெரியவந்துள்ளது. பெருகிவரும் தொழிநுட்ப மேம்பாடு காரணமாக உரிய உட்கட்டமைப்பு, ெவளிச்சம் இருக்கும்பட்சத்தில் இரவு நேரங்களில் போஸ்ட்மார்டம் நடத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், உரிய அடிப்படை உட்கட்டமைப்பு உள்ள மருத்துவமனைகள் சூரியன் மறைவுக்கு பிறகு அதாவது இரவு நேரத்தில் போஸ்ட்மார்டம் நடத்தலாம். சட்ட ரீதியான தேவை மற்றும் எதிர்கால ஆய்வுக்காக இரவு நேரத்தில் போஸ்ட்மார்டம் செய்வதை முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். இரவு நேர போஸ்ட்மார்டத்திற்கு சமபந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் நிதர்சனமான உண்மை. இந்த விஷயம் தெரியாமல் சமூக வலைத்தளங்களில் இரவு நேரத்தில் போஸ்ட்மார்டம் நடத்தப்பட்டதை மிகப்பெரிய குற்றம் என்று பதிவிடுவது மக்களிடையே மீண்டும் குழப்பத்தையும், சிக்கலையும் ஏற்படுத்தும். இதுபோன்ற அவதூறு பதிவுகள் வெளியிட்டவர்களை கண்டறிந்து ஆராயும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
