தேவையானவை
சோளம் – 2 கப்
துவரம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
உளுந்து – 1 கப்
பாசிப்பருப்பு – அரை கப்
பெரிய வெங்காயம் – 2
மிளகாய் வற்றல் – 6
பெருங்காயம் – சிறிதளவு
கொத்துமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
சோளத்தை 6 மணி நேரம் ஊறவைக்கவும். துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து என நான்கு பருப்புகளையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஊறவைத்த அரிசியையும், பருப்பையும் தனித்தனியாக அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். அதனுடன் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிச் சேர்த்து கூடவே பெருங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுத்ததாக தோசைக்கல்லை சூடாக்கி மாவை ஊற்றி எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும். சுவையான சோள அடை தயார்.
