×

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை – 2025 போட்டிகளுக்கான முன்பதிவு தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2025 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அவர்கள் 25.08.2025 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டியில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 16,28,338 பேர் இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து, 5 பிரிவுகளில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.

மேலும், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை – 2025 போட்டிகள் அக்டோபர் 2-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 5 பிரிவுகளில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகள் சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை மற்றும் செங்கல்பட்டு முதலிய 13 நகரங்களில் மாவட்ட மற்றும் மண்டல அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 30,136 வீரர்களுக்கு நடத்தப்படுகின்றன. இணைக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணைப்படி போட்டிகள் நடைபெறும்.

இவ்வாண்டு நடைபெறும் போட்டிகளில் முதல் முறையாக eSports விளையாட்டுச் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான முன்பதிவு cmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் நடைபெற்று வருகின்றது.

Tags : Chief Minister's Cup - 2025 ,Chennai ,Tamil Nadu Chief Minister's Cup - 2025 ,Tamil Nadu Sports Development Authority ,Chief Minister ,Deputy Chief Minister ,Tamil Nadu ,Tamil Nadu Chief Minister's Cup… ,
× RELATED இருதய இடையீட்டு...