×

காமயகவுண்டன்பட்டியில் கொரோனாவில் மீண்டோருக்கு விழிப்புணர்வு முகாம்

கம்பம், டிச, 25: காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கான பராமரிப்பு முகாம் நடைபெற்றது. இதில் கொரோனாவில் இருந்து மீண்டர்களுக்கு ஏற்படக்கூடிய உடல் அசதி, மூட்டுவலிகள், நுரையீரல், இருதயம், கண், நரம்பு மண்டலம், மூளை, மனஅழுத்தம், தூக்கமின்மை போன்ற பாதிப்புகளுக்கு விழிப்புணர்வும், இவைகளை போக்க மருதம்பட்டை சூரணம், நெல்லிக்காய் லேகியம், அமுக்கரா சூரணம், அன்னபேதி மாத்திரை, சிலாசத்து மாத்திரை, நிலவேம்பு கஷாயம், கபசுரக கஷாயம், பிண்ட தைலம், மஞ்சள் கற்கம் அடங்கிய சித்த மருத்துவ பெட்டகமும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து இவர்களுக்கு யோகாசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானங்கள் குறித்து ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்தவர் சிராஜுதீன் பயிற்சியளித்தார். பின்னர் ஆரோக்கியமான உணவுகள், நெல்லிக்கனி, பூண்டு, மிளகு போன்றவற்றை தினந்தோறும் பயன்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதில் டாக்டர்கள் சுதா, முருகானந்தம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் சூரியகுமார், சரவணன், கௌதம் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Awareness camp ,Minor ,Corona ,Kamayakaundanpatti ,
× RELATED ஈர நில பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்