×

முதுகுளத்தூரில் 6 மாதத்தில் உடைந்துபோன மடை பணிகள் தரமில்லை என குற்றச்சாட்டு

சாயல்குடி, டிச.25: முதுகுளத்தூரில் கட்டி முடித்து 6 மாதத்தில் கண்மாய் மடைகள் உடைந்துவிட்டன. பணிகள் தரமில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 46 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்குள்ள 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கிராம ஊரணிகளில் மடைகள், படித்துறைகள் கட்டப்பட்டன. ரூ.2 லட்சம் மதிப்பில் இந்தாண்டு மழைக்காலம் துவங்கும் முன்பாக கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால் கட்டுமான  பணிகள் தரமற்று நடந்ததால் சில இடங்களில் மடைகள், படித்துறைகள் ஆறு மாதத்திற்கு உடைந்து சேதமாகி வருகிறது. முதுகுளத்தூர் ஒன்றியம், மைக்கேல்பட்டிணம் பஞ்சாயத்து,  சவேரியார்பட்டிணம்  தேவலாயம் பின்புறம் கிராம ஊரணி உள்ளது. கீழத்தூவல் கண்மாய் பகுதியிலிருந்து ஓடி வரும் தண்ணீர் இந்த ஊரணிக்கு வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் மற்றும் ஊரணியின் வெளிப்பகுதியில் மடை கட்டப்பட்டது.

 கடந்த சில நாட்களாக பெய்து  வந்த மழைக்கு இந்த கால்வாய் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை மடை வழியாக ஊரணியில் பாய்ச்சப்பட்டது. மடை அமைக்கப்பட்டு ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில் கட்டுமானங்கள் உடைந்து சேதமானது. சிமிண்ட் குழாய்களும் ஒழுங்கற்று கிடக்கிறது. இதனால் ஊரணி உள்வாய் பகுதியில் கீழ்மட்டத்தில் குறைந்தளவு  மட்டுமே தண்ணீர் நிரம்பியுள்ளது.

 மழைநீர் வழித்தடத்தில் உடைந்த கட்டுமானத்தால் ஊரணியில் தண்ணீரை பாய்ச்சி முழுவதுமாக சேமிக்க முடியவில்லை. இதனால் ஓரிரு மாதத்தில் ஊரணி வறண்டு விடும் என்பதால் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே புதிதாக தரமான மடை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Mudukulathur ,
× RELATED என்னை பச்சோந்தி என்ற எடப்பாடி பச்சை...