×

சத்திரக்குடி பகுதியில் நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல்: உதவி இயக்குனர் ஆய்வு

பரமக்குடி, டிச.25:  சத்திரக்குடி வட்டார பகுதிகளில் நெற்பயிர்களில் இலைச் சுருட்டு புழு தாக்குதல் அதிகரித்து வருவதையொட்டி, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வயல்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். சத்திரக்குடி வட்டாரத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் சில இடங்களில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேளாண்மை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட. சத்திரக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கதிரேசன் புழு தாக்குதலை கட்டுப்படுத்த  விவசாயிகளுக்கு  ஆலோசனை வழங்கினார்.

பின்னர் மானாவாரி பயிரில் பூக்கும் பருவம் மற்றும் பொதி பருவத்தில், பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் தாக்குகின்றன. தற்போதுள்ள கால சூழ்நிலை கருத்தில்கொண்டு, நெற்பயிரில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் ஆங்காங்கே இலை சுருட்டுப் புழுத்தாக்குதல் உள்ளது.  இதனை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் உள்ள களைச்செடிகளை அழிக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக யூரியா போன்ற உரங்கள் இடக்கூடாது பரிந்துரைக்கப்பட்ட யூரியாவை வேப்பம் புண்ணாக்குடன் கலந்து ஐந்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் இடவேண்டும்.

பொதி பருவமாக பயிர் இருந்தால் மேல் உரம் தேவையில்லை. அந்த பூச்சிகளை விளக்குப்பொறி வைத்து கவர்ந்து அழிக்க வேண்டும். விளக்குப் பொறிகளை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வைக்க வேண்டும். கட்டுப்படுத்தும் முறைகள் ஒரு ஏக்கருக்கு குளோர நைட்ரினி - புரோல் 60 மிலி, கார்ப்டாப் ஹைட்ரோ குளோரைடு 400 கிராம், இன்டெக்ஸ்சோ கார்ப் 140 மிலி.

புளுபெண்டமைடு 20 மிலி ஆகிய ரசாயன பூச்சி கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தெளிக்கலாம். இத்துடன் டீப்பால் (அல்லது) காதி சோப்பு போன்ற ஒட்டும் திரவம் கலந்து 200 லிட்டர் அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும் என கூறினார்.

Tags : area ,Chattrakuta ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு