×

அக்.4ம் தேதி வரை தமிழ்நாட்டில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ள காரணத்தால் அக்டோபர் 4ம் தேதி வரை லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தெற்கு ஒடிசாவின் உள் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மேற்கு விதர்பா மற்றும் அதை ஒட்டிய வடக்கு மத்திய மகாராஷ்ட்ரா பகுதிகளில் நேற்று நிலை கொண்டது.

இன்று அது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது. அத்துடன் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நேற்று கோவை மாவ ட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் அக்டோபர் 4ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,South India ,Chennai Meteorological Department ,South Odisha ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்