×

இளையான்குடி பகுதியில் மழையால் மிளகாய் செடிகள் பாதிப்பு: நிவாரணம் வழங்க கலெக்டர் உறுதி

இளையான்குடி, டிச.24: இளையான்குடி பகுதியில் பாதிக்கப்பட்ட மிளகாய் செடிகளை, கலெக்டர் ஆய்வு செய்தார். இளையான்குகுடி வட்டாரத்தில் நடப்பாண்டில் சுமார் 4ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதி மற்றும் டிசம்பர் மாதத்தில் தொடர்சியாக பெய்த பருவ மழையால், விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கியது.
அதனால் 2ஆயிரம் ஹெக்டேர் மிளகாய் சாகுபடி பாதிப்படைந்தது.

பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு எற்ப, நேற்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி, இளையான்குடி பகுதி கீழநெட்டூர், கீழாயூர், மேலாயூர், முனைவென்றி ஆகிய பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட மிளகாய் சாகுபடி நிலங்களை, வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் மற்றும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அழகுமலை ஆகியோருடன் ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளை சந்தித்து, உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதி கூறினார்.

Tags : chilli plants ,area ,Ilayankudi ,Collector ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...