×

5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய திருப்பாலைக்குடி ஊரணி

ஆர்.எஸ்.மங்கலம், டிச.24:   ஆர்.எஸ்.மங்கலம் அருகே கிழக்கு கடற்கரை சாலை திருப்பாலைக்குடியில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் கடல் தொழிலையே பிரதான தொழிலாக நம்பி தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டு காலமாக குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக உள்ளதால், கிணற்று நீரும் உப்பு தண்ணீராகவே உள்ளது. இதனை குடிக்க பயன்படுத்த முடியாத நிலையில், காவிரி தண்ணீரும் கானல் நீராக உள்ளதால், இப்பகுதியினர் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர்.

இப்பகுதி மக்கள் டேங்கர்களில் வரும் தண்ணீரை தான் குடம் 1க்கு ரூ.5 முதல் 10 வரை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலை திருப்பாலைக்குடி பழங்கோட்டை பகுதியில் உள்ள ஊரணியில் மழை நீரை தேக்கி பல ஆண்டுகளாக குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக பருவமழை ஏமாற்றத்தால் ஊரணி முழுமையாக நிரம்பாத நிலையில், ஒரு சில மாதங்களில் ஊரணி நீர் வற்றி, அப்பகுதியினர் குடிநீருக்கு கடும் சிரமமடைந்து வந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டில் பெய்த பருவ மழையால் 5 ஆண்டுகளுக்கு பிறகு குளம் முழுமையாக நீர் நிரம்பியுள்ளதால், கோடை காலத்தில் ஏற்படக் கூடிய குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய முடியும் என அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Tirupalaikudi Urani ,
× RELATED முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும்...