ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இரு பாகிஸ்தான் வீரர்கள், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூவரும் போட்டிக்கட்டணத்தில் 30% அபராதமாக செலுத்த ICC உத்தரவுட்டுள்ளது. போர் தொடர்பான ஆத்திரமூட்டும் சைகைகளை செய்ததாக பாக். வீரர்கள் ஹாரிஸ் ரவூஃப், சாஹிப்சாதா ஃபர்ஹான் மீதும், பஹல்காம் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் நடத்திய விசாரணையில் உறுதியானதையடுத்து ICC உத்தரவிட்டுள்ளது.
