×

சாலையில் மெகா பள்ளம்

சீர்காழி, செப் .27: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றன.  மேலும் மழை பெய்யும் போது சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மழை நீர் நிரம்பி நிற்கும் போது பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன.

காலையில் பள்ளம் ஏற்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சரி செய்யாமல் இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் நலன் கருதி பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

 

Tags : Sirkazhi ,Sirkazhi-Bidari South Road ,Mayiladuthurai district ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா