×

கொட்டும் மழையிலும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, செப். 27: ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம், கொட்டும் மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் . தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் திடீரென்று பலத்த மழை பெய்தது, மழையை பொருட்படுத்தாமல், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்திற்காக அடிக்கப்பட்டிருந்த பேனர்களை தலையில் சுமந்தபடி, மழையில் நனைந்தபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : Rural Development Department ,Mayiladuthurai ,Collector ,Rural Development Department Officers' Association ,Tamil Nadu Rural Development Department Officers' Association ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா