விருதுநகர், செப்.27: ஓட்டல் தொழிலாளியை வழிமறித்து செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் குல்லூர்சந்தையை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன்(55). பாலவநத்தத்தில் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து இருசக்கர வாகனத்தில், பெரியவள்ளிகுளம் காமராஜர் மணிமண்டபம் அருகில் வந்தார். அப்போது பாலவநத்தத்தை சேர்ந்த பாண்டி, குல்லூர்சந்தை முகாமை சேர்ந்த குனிஷ்டன் இருவரும் வழிமறித்துள்ளனர்.
நவநீதகிருஷ்ணன் சட்டை பையில் இருந்த ஆண்ட்ராய்டு செல்போனை பறித்துள்ளனர். ஆட்கள் வருவதை பார்த்து கத்தினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி தப்பி சென்றுள்ளனர். சூலக்கரை போலீசில் நவநீத கிருஷ்ணன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டி, கனிஷ்டன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
