- மதுரை
- மதுரை நகர காவல் போக்குவரத்து பிரிவு
- எஸ்ஐ
- பாண்டி கண்ணன்
- பிரபாகரன்
- கோவில்பட்டி காவல் நிலையம்
- தூத்துக்குடி மாவட்டம்
மதுரை, செப். 27: மதுரை நகர் போலீஸ் போக்குவரத்து பிரிவின் சிறப்பு எஸ்ஐ பாண்டி கண்ணன், ஏட்டு தளபதி பிரபாகரன் ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் திருடப்பட்ட டூவீலரையும், அதனை திருடி கொண்டு வந்த குற்றவாளியையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் குற்றவாளியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து டூவீலரை மீட்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், சிறப்பு எஸ்ஐ, ஏட்டு ஆகியோரை பாராட்டினார்.
