×

கும்மியடித்து ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர்: சமத்துவ மக்கள் கழக மகளிர் அணி சார்பில் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் மாநில துணைச்செயலாளர் மாலதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து கைகளில் பதாகைகளை ஏந்தி பெண்கள் பாட்டுப்பாடி கும்மியடித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாநில மாணவரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, பொருளாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் மதுரை வீரன், தொகுதி செயலாளர் முத்துராஜ், நிர்வாகிகள் ரவி சண்முகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Demonstration ,
× RELATED பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்