புதுடெல்லி: இந்த நிதியாண்டில் ஒன்றிய அரசு ரூ.14.72 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளது. இதுபற்றி ஒன்றிய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அனுராதா தாக்கூர் கூறுகையில், ‘2025-26ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.8 லட்சம் கோடி க்கு பதில் ரூ.7.95 லட்சம் கோடி கடன் மட்டுமே வாங்கி உள்ளது. இரண்டாம் பாதியில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் வாங்கும், இதனால் நடப்பு நிதியாண்டிற்கான மொத்த கடன் ரூ.10,000 கோடி குறையும். எனவே இந்த ஆண்டிற்கான மொத்த கடன் இப்போது ரூ.14.72 லட்சம் கோடியாக உள்ளது.
