×

கிட் அண்டு கிம் இன்ஜி., கல்லூரியில் உலக விண்வெளி விழா கொண்டாட்டம்

காரைக்குடி, செப். 27: காரைக்குடி அருகே கீரணிப்பட்டி கிட் அண்டு கிம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு உலக விண்வெளி தினம் கொண்டாப்பட்டது. துணைபேராசிரியர் தஸ்லிமா பானு வரவேற்றார். கிட் அண்டு கிம் பொறியியல், மேலாண்மை கல்லூரிகள், எஸ்ஆர்விவி சிபிஎஸ்இ பள்ளி கல்விக்குழும சேர்மன் வி.அய்யப்பன் காணொலி காட்சி வழியாக துவக்கி வைத்தார். நிர்வாகஇயக்குநர் பிரியதர்ஷினிஅய்யப்பன், கல்லூரி செயலாளர் ஹர்சினி அய்யப்பன் ஆகியோர் வாழ்த்தினர். கல்லூரி முதல்வர் அருள் தலைமை வகித்தார். மஹேந்திரகிரி ஐபிஆர்சி எஸ்எப் பிரிவு துணைத்தலைவர் விஞ்ஞானி ராகுல்கோவிந்த் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் மெய்யப்பன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். பேராசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Tags : World Space Day ,Kit ,Kim Eng. ,Karaikudi ,Kim Engineering and Technology College ,Keeranipatti ,World Space Week ,Assistant Professor ,Taslima Banu ,Kit and Kim Engineering ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா