×

சரணாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

நெல்லை, டிச. 24: நெல்லை சந்திப்பில் உள்ள சரணாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் விஷ்ணு தலைமை வகித்தார். விழாவில், சரணாலய குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நோவா கார்பன்ஸ் நிர்வாக இயக்குநர் அந்தோனிதாஸ் பங்கேற்று சரணாலய குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி வாழத்து தெரிவித்தார். நெல்லை சமூக சேவை சங்க இயக்குநர் மோட்சராஜன் கிறிஸ்துமஸ் செய்தி அளித்தார். ஏற்பாடுகளை சரணாலய இயக்குநர் ஜெயபாலன் செய்திருந்தார். இதேபோல் நெல்ைல மாநகர் மாவட்ட காங்கிரஸ்  சார்பில் 4வது ஆண்டாக கிறிஸ்துமஸ் நலத்திட்டங்கள் வழங்கும் விழா, பாளை பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை வகித்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போர்வைகள், சில்வர் தட்டுகளை வழங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மதிய உணவு வழங்கினார். மேற்கு மாவட்ட பொருளாளர் முரளி ராஜா இனிப்பு, கேக் வழங்கினார்.

மின்வாரிய ஐஎன்டியுசி மண்டல செயலாளர் சார்லஸ், வக்கீல் கமலநாதன், சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பொதுச்செயலாளர் பாக்கியகுமார் முன்னிலை வகித்தனர். இதில் பொருளாளர் ராஜேஷ்முருகன், பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், மனோகரன், சிறுபான்மை பிரிவு தலைவர் முகம்மது அனஸ் ராஜா, மானூர் வட்டார தலைவர் சொர்ணம், தச்சை மண்டல தலைவர் கெங்கராஜ், பள்ளி முதல்வர் திகலவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பாளை மண்டல தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.

பாளை தெற்கு பஜாரில் உள்ள டிடிடிஏ அல்போன்சா பள்ளியில் தமாகா சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சிந்தா சுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் மாரித்துரை, இளைஞரணி தலைவர் கிருஷ்ணகுமார், பாளை மண்டல தலைவர் பிலால், சிறுபான்மை பிரிவு செரீனா, ரமேஷ் செல்வன், மானூர் தெற்கு வட்டார தலைவர் பிச்சுமணி, பீட்டர் தேவதாஸ் அடிகள், பள்ளி தலைமை ஆசிரியர் ரேச்சல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Christmas Celebration ,Sanctuary ,
× RELATED பளியன்குடி வனப்பகுதி வழியாக கண்ணகி...