×

குண்டூர் அருேக விபத்து சாலை தடுப்பில் கார் மோதி தந்தை, மகள் பரிதாப பலி

*3 பேர் படுகாயம்

திருமலை : திருப்பதியை சேர்ந்தவர் டாக்டர் தங்கெல்லா கிஷோர்(45), பிரபல பொது அறுவை சிகிச்சை நிபுணர். இவரது மனைவி திருப்பதி மாநகராட்சி கவுன்சிலர் டாக்டர் டாங்கில்லா சந்தியா(38). தம்பதியின் மகள் அஸ்விதா(12), மகன்(7) கிஷோர். இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரும், கிஷோரின் தங்கை டாக்டர் அண்ணா சுவேதாவுடன் (35) காரில் குண்டூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

காரை கிஷோர் ஓட்டிச் சென்ற நிலையில், நேற்று அதிகாலை 2 மணி அளவில் பல்நாடு மாவட்டம், சிலகலூரிபேட்டை மண்டலம், டாடபுடியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது.

இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி, டிரைவர் இருக்கையில் இருந்த கிஷோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் பலத்த காயமடைந்த நிலையில், அனைவரும் மீட்கப்பட்டு சிலக்கலூரிபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அஸ்விதாவை(12) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Guntur ,Thirumalai ,Dr. ,Tangella Kishore ,Thirupathi ,Tirupathi ,Municipal ,Councillor ,Dr ,Tangilla Sandhya ,Asvita ,Kishore ,
× RELATED இந்தியா, ஓமன் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து!!