×

மத்திய வடக்கு வங்க கடல் பகுதிகளில்நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது: வானிலை மையம்

சென்னை: மத்திய வடக்கு வங்க கடல் பகுதிகளில்நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் காலை வடக்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் – மேற்கு வங்க பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை அளவில் வலுகுறைந்தது. இருப்பினும், நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக வடமேற்கு, அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவியது. இந்நிலையில் மத்திய வடக்கு வங்க கடல் பகுதிகளில்நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா – ஒடிசா கடலோரப் பகுதிகளில் கரையை கடக்க கூடும். மேலும் அரபிக்கடல், வங்கக்கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் செப் ப26, 27 ஆகிய 2 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CENTRAL NORTH BENGAL SEA REGION ,CHENNAI ,northern Orissa ,northwestern Bengal ,West Bengal ,
× RELATED வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய...