×

மணலி மண்டலத்தில் ரூ.15 கோடியில் 30 சாலை துடைப்பான் வாகனங்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு அர்ப்பணித்தார்

திருவொற்றியூர்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில், மணலி – எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் அமைப்பு மன்றத்தில் இயந்திர சாலை துடைப்பான்கள் தொடக்கம் மற்றும் மரம் நடும் விழா மணலி மண்டல அலுவலகத்தில் நடந்தது.

அமைச்சர் தங்கம் தென்னரசு ரூ.15 கோடி மதிப்பிலான 30 சாலை துடைப்பான் வாகனஙகளை பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து, மரக்கன்றுகளை நட்டார். இவை 15 மண்டலத்திற்கும் பிரித்து வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், மாசு கட்டுப்பாட்டு வாரிய கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு, எம்எல்ஏக்கள் கே.பி.சங்கர், மாதவரம் சுதர்சனம், மண்டல உதவி ஆணையர் தேவேந்திரன், மண்டல குழு தலைவர் ஏ.வி,ஆறுமுகம், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், நந்தினி சண்முகம், கீர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Manali zone ,Minister ,Thangam Tennarasu ,Thiruvottriyur ,Pollution Control Board ,Chennai Corporation ,Manali-Ennore Redevelopment and ,Revitalization Organization Forum ,Manali Zone Office ,Thangam… ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...