- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உதயநிதி ஸ்டாலின்
- உலக சாம்பியன்ஷிப்
- சென்னை
- ஆனந்த்குமார் வேல்குமார்
- உலக சாம்பியன்ஷிப் ஸ்பீடு ஸ்கேட்டிங்
- தமிழ்நாடு…
சென்னை: தமிழ்நாட்டின் ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார். இவர், உலக சாம்பியன்ஷிப் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியாவின் முதல் வீரர் என்ற வரலாற்றை படைத்ததுடன் 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கம் வென்றார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெறுவதற்கான ஊக்குவிப்பு திட்ட வீரர் ஆனந்த்குமார் வேல்குமார், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேற்று சந்தித்து விளையாட்டுகளில் வென்ற பதக்கங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
