×

பாடத்திட்டம் அவகாசம் பதிவாளர் தகவல்

காரைக்குடி, செப்.26: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, அழகப்பா பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரிகளில் படித்து தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், படிப்புக்காலம் முடிந்ததில் இருந்து தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுத இரண்டு வருடங்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர். எனவே இணைப்புக் கல்லூரிகளில் 2017ம் ஆண்டு பாடத்திட்டத்தின் வழியாக படித்த இளநிலை மாணவர்களின் தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம் வரும் ஏப்ரல் 2026 ஆண்டிற்கான பல்கலைக்கழக தேர்வுடன் முடிவடைகிறது. 2017ம் ஆண்டு பாடத்திட்டம் வழியாக படித்த முதுநிலை மாணவர்களின் கால அவகாசம் ஏப்ரல் 2025ல் முடிவடைந்து விட்டது என பதிவாளர் முனைவர் செந்தில்ராஜன் தெரிவித்துள்ளார்.

Tags : Karaikudi ,Karaikudi Alagappa University ,Alagappa University ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா