×

சிவகங்கை நகராட்சித் தலைவரை மிரட்டிய ரவுடிகள் கைது

சிவகங்கை, செப். 25: சிவகங்கை நகராட்சி தலைவரை பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை திமுக நகர் செயலாளராக இருப்பவர் துரை ஆனந்த். இவர் சிவகங்கை நகராட்சி தலைவராகவும் உள்ளார். இவர் சிவகங்கை-மானாமதுரை சாலையில் சாமியார்பட்டி விலக்கு அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மானாமதுரை அருகே வேலுார் கிராமத்தைச் சேர்ந்த சிவசூரியன் மகன் நல்லுசாமி, இடைக்காட்டூரை சேர்ந்த நடராஜன் மகன் அஜித் இருவரும் இந்த ஓட்டலுக்கு சென்று அங்கு இருந்த ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தொடர்ந்து துரை ஆனந்திற்கு போன் செய்து அவரையும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து துரைஆனந்த் சிவகங்கை நகர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் நல்லுசாமி மற்றும் அஜித்தை கைது செய்து விசாரித்து வருகின்ற
னர்.

 

Tags : Sivaganga Municipality Chairman ,Sivaganga ,Durai Anand ,Sivaganga DMK Nagar ,Samiyarpatti ,Sivaganga-Manamadurai road ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா