கும்பகோணம், செப். 25: கும்பகோணம் அருகே பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம் சீரமைக்கும் பணியை ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணியினை தஞ்சை ரயில்வே முதன்மை பொறியாளர்கள் சத்தியநாராயணன், இளங்கோ, உதவி கோட்ட பொறியாளர் குலசேகரன், உதவி பொறியாளர் ஸ்ரீதர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது திருச்சிராப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன் உடன் இருந்தார்.
