- மேலச்சிவபுரி
- கல்லூரி
- முருகேச பாண்டியன்
- பொன்னமராவதி
- தமிழ்நாடு அரசு
- மேலச்சிவபுரி கணேசர் கல்லூரி ஓய்வு பெற்ற நூலகர் முருகேச பாண்டியன்
- நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை
- மேலச்சிவபுரி கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- புதுக்கோட்டை
பொன்னமராவதி, செப்.25: மேலச்சிவபுரி கணேசர் கல்லூரி ஓய்வுபெற்ற நூலகர் முருகேசபாண்டியனுக்கு தமிழக அரசின் பாரதியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் நூலகராகவும், நூலகவியல் தகவல் அறிவியல் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் முனைவர் முருகேசபாண்டியன். இவருக்கு, தமிழக அரசின் பாரதியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர், நூலகம் தகவல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் பாரதியார் விருதுக்கு தகுதி பெற்றுள்ள முனைவர் முருகேசபாண்டியனுக்கு கல்லூரி நிர்வாகிகள், முதல்வர், முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
