×

மொபட் மீது கார் மோதி காயமடைந்தவர் சாவு

கேடிசி நகர், செப். 25: நெல்லை கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (65). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 19ம்தேதி கங்கைகொண்டான் நான்கு வழிச்சாலையை நோக்கி மொபட்டில் வந்தார். அப்போது நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெருமாள் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : KTC Nagar ,Perumal ,Venkatachalapuram North Street ,Gangaikondan, Nellai ,Gangaikondan ,-lane highway ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா