- தமிழ்நாடு மாநில சக்தித்
- முதன்மை செயலாளர்
- பிலா வெங்கடேசன்
- சென்னை
- தலைமைச் செயலாளர்
- எரிசக்தி துறை
- தமிழ்நாடு அரசு
- பிலா வெங்கடேசன்
- மருத்துவம் மற்றும்
- தொற்று
- பீலா வெங்கடேசன்
சென்னை: தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் (56) உடல் நலக் குறைவால் காலமானார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக பணியாற்றியவர்.
இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பீலா வெங்கடேசன் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி ஆகும். பீலா வெங்கடேசனின் தந்தை எல்.என்.வெங்கடேசன் தமிழக காவல்துறையில் டிஜிபியாக பதவி வகித்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
