×

மேகமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீ

 

வில்லிபுத்தூர், செப்.24: வில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி பகுதியில் மேகமலை புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அழகர் கோயிலுக்கு மேல் பகுதியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்த வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன் உத்தரவின் பேரில் வில்லிபுத்தூர் ரேஞ்சர் செல்லமணி தலைமையில் வனத்துறையினர் மலைவாழ் மக்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகம் இருப்பதால் தீயை அணைப்பதில் சிரமம் நிலவியது.
காட்டுத்தீயால் அங்கு வசித்து வந்த வனவிலங்குகள் வேறு பகுதிக்கு ஓட்டம் பிடித்தன.

Tags : Meghamalai Tiger Reserve ,Western Ghats ,Villiputhur ,Azhagar Temple ,Deputy Director ,Murugan… ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா