- பழனி மகளிர் கல்லூரி சாதனை
- பழனி
- கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
- பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கல்லூரி
பழநி, செப். 24: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையயோன கபடி போட்டி நடந்தது. இப்போட்டியில் 9 மகளிர் கல்லூரிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் பங்கேற்ற பழநி அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் கல்லூரி அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரியின் தாளாளர் மாரிமுத்து, செயலர் வெங்கடேஷ், கல்லூரியின் முதல்வர் புவனேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
