×

திருவெறும்பூர் அருகே குட்கா விற்ற முதியவர் கைது

 

திருவெறும்பூர், செப்.24: திருவெறும்பூர் அருகே துவாக்குடி ராவுத்தான்மேடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எலக்ட்ரிக் டூவீலரில் சந்தேகத்திற்கு இடமாக இருந்தவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர், துவாக்குடி வடக்குமலை சொசைட்டி தெருவை சேர் ந்த துரைராஜ்(65) என்பதும், அவரது டூவீலரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Thiruverumpur ,Rawthanmedu ,Dhuvakkudi ,Dhuvakudi Vadakummalai Society Street ,
× RELATED தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அழைப்பு...