×

கம்பி வேலி அமைத்ததை கண்டித்து மா.கம்யூ. ஆர்ப்பாட்டம்

 

அரியலூர், செப்.24: அரியலூர் மாவட்டம், பெரியநாகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பிரிங்கியம், பாலக்கரை கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை அடைத்து கம்பி வேலி அமைத்த தனி நபரை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், பொதுப் பாதையை ஆக்கிரமித்த தனிநபர் மீது நடவடிக்கை எடுத்து பாதையை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் செயலர் அருண் பாண்டியன் தலைமை வைத்தார்.
மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலர் இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர் துரைசாமி, உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், கட்சியினர் திரளாக கலந்து கொண்டு முழக்கமிட்டன.

Tags : Ariyalur ,Marxist Communist Party ,Ariyalur Anna Statue ,Palakkarai village ,Kattupriingiyam ,Periyanagalur panchayat ,
× RELATED காவல்துறை எச்சரிக்கை எறையூர்...