×

நாகையில் சிஐடியு மின்ஊழியர் ஆர்ப்பாட்டம்

 

நாகப்பட்டினம்,செப்.24: நாகையில் தமிழ்நாடு சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நாகப்பட்டினம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்திட்டத்தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி வழங்க வேண்டும். தடைசெய்யப்பட்ட 19 இடங்களில் பணிபுரியும் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : CITU Electrical Workers Protest ,Nagapattinam ,Tamil Nadu CITU Electrical Workers Central Organization ,Nagapattinam Supervising Engineer's Office ,Kalaiselvan ,Electricity Board… ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா