×

தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர் விட்டிருக்கும் திமுக இன்னும் நூறு ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: மெய்சிலிர்த்து நிற்கிறேன். விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாட்டை சேர்ந்த ஓவியர் கோவிந்தராஜன் எழுதிய கடிதமும் ஓவிய புத்தகமும் எனக்கு வந்தடைந்தது. அவருக்கு வயது 87. அவரது எழுத்தில் வெளிப்படும் கழக பற்றைக் காணுங்கள், தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் திராவிட முன்னேற்ற கழகம் இன்னும் நூறு ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags : DMK ,Tamil ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Dravida Munnetra Kazhagam ,Villupuram ,
× RELATED ‘‘என்னை ஏன் வம்புக்கு...