×

வளர்ப்பு பிராணி விவகாரம்: வழக்கை ரத்துசெய்ய பீட்சா, மோர் வழங்க டெல்லி ஐகோர்ட் நிபந்தனை

டெல்லி: டெல்லியில் வளர்ப்பு பிராணி விவகாரத்தில் சண்டையிட்டுக் கொண்ட பக்கத்து வீட்டுக்கார்கள் இருவர் மீதான வழக்கை ரத்துசெய்ய ஆசிரம குழந்தைகளுக்கு பீட்சா, மோர் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பக்கத்து வீட்டுக்காரர்களின் வளர்ப்பு பிராணி தொடர்பான சண்டை காவல் நிலையம் வரை சென்றது. பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொண்டதாக இரு தரப்பும் நீதிபதி அருண் மோங்காவிடம் தெரிவித்தனர். இருவரின் சமாதானத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆசிரம குழந்தைகளுக்கு பீட்சா, மோர் தர நிபந்தனை விதித்தார். குழந்தைகளுக்கு பீட்சா, மோர் வழங்கப்பட்டதை உறுதி செய்ய காவல் நிலைய விசாரணை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Tags : Delhi High Court ,Delhi ,
× RELATED ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச்...