×

சென்னை கோயம்பேட்டில் நாராயணன் என்பவரிடம் ரூ.45 லட்சம் வழிப்பறி!!

சென்னை: சென்னை கோயம்பேட்டில் நாராயணன் என்பவரிடம் ரூ.45 லட்சத்தை மர்மநபர்கள் வழிப்பறி செய்துள்ளனர். கொத்தவால்சாவடி மார்க்கெட்டில் வியாபாரி ஒருவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பியவரிடம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் நாராயணன் பணிபுரிந்து வருகிறார். இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது பணத்தை பறித்துச் சென்ற மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

Tags : Chennai ,Narayanan ,Koyambedu ,Koyambedu, Chennai ,Kothavalsavadi market ,
× RELATED அரசு பஸ்சில் கடத்திய 8.69 கிலோ தங்க நகை பறிமுதல் 2 வாலிபர்கள் சிக்கினர்