×

சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள மின்வாரிய கேபிள் சேதம்

சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள மின்வாரிய கேபிள்கள் சேதம் அடைந்தன. ஒப்பந்த நிறுவனத்தினர் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டும்போது கேபிள்கள் சேதம் அடைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில் பேசின் பிரிட்ஜ் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai Basin Bridge ,Chennai ,JCB ,Electricity Board ,Basin Bridge ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்