×

மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

 

திருச்சி, செப்.23: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நேற்று மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர். கூட்டத்தில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள் துர்காதேவி, ஜெயநிர்மலா, விஜயலட்சுமி கண்ணன், துணை ஆணையர், நகரப் பொறியாளர், நகர் நல அலுவலர், செயற்பொறியார்கள், உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

Tags : Trichchi ,Mayor's Office Meeting Hall ,Mayor ,Anbhagan ,Trichy Municipal Office ,Commissioner ,Madhubalan ,
× RELATED இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் ஜெட் சேவையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்