×

மகாளய அமாவாசையையொட்டி கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

 

திருவாரூர், செப்.22: மகாளய அமாவாசையையொட்டி திருவாரூரில் உள்ள கமலாலய குளத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆண்டுதோறும் ஆடி மாதம் மற்றும் தை மாதங்களில் வரும் அம்மாவாசை தினத்தில் பொது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
அவ்வாறு திதி கொடுப்பதால் முன்னோர்கள் தங்களது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்பர் என்பது ஐதிகமாகும். இந்த 2 மாதங்களை விட புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறந்தது என்பதால் நேற்று இந்த மஹாளய அம்மாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலின் கமலாலயம் குளத்திலும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags : Kamalalaya Kulam ,Mahalaya Amavasya ,Thiruvarur ,Ammavasya ,Thai ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா