×

தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு செல்வபெருந்தகை கண்டனம்

சென்னை: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு செல்வபெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னையில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட கருத்துகள், தமிழக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கும் வரலாற்றில் இல்லாத அநீதி ஆகும்.

“தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்கப்படுவதற்கு 2020 தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் ஆணவத்துடன் கூறியதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். கல்வி என்பது அரசியலோ அல்லது வணிகமோ அல்ல; அது மக்கள் அடிப்படை உரிமை. ஒன்றிய அரசு, கல்வியை அரசியல் கருவியாக மாற்றி, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தி, அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் தவிர்க்க முடியாத பாதிப்புகளுக்கு உட்படுத்துகிறது.

இது அநீதியும், அதிகார வன்முறையும் கலந்த, வரலாற்றில் மிகவும் கொடிய செயல். எந்தவொரு நிபத்தனையையும் விதிக்காமல் உடனடியாக தமிழ்நாட்டின் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Selvaperundhagai ,Dharmendra Pradhan ,Chennai ,Union Education Minister ,Tamil Nadu ,Congress ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்