தூத்துக்குடி, எட்டயபுரத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, டிச.22:  சமையல்  எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ள மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்  நடந்தது. தூத்துக்குடி சிதம்பரநகரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு,  மாநகரக் குழு உறுப்பிணர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்  அர்ச்சுனன், மாநகர செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், ஆறுமுகம், ஜனநாயக வாலிபர்  சங்க மாவட்டச் செயலாளர் முத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் காசி, சீனிவாசன்,  மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.  எட்டயபுரம்: இதே போல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாகுபாடின்றி கொண்டைக்கடலை வழங்க வலியுறுத்தி எட்டயபுரத்தில்  மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரச் தாலுகா செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். தாலுகா குழு உறுப்பினர் நடராஜன் சிஐடியு ஆட்டோ சங்கர் தலைவர் கண்ணன் விஜயா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: