சென்னை: ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களை மட்டும் கற்றுக் கொடுப்பவர்கள் அல்ல, தங்கள் அனுபவத்தையும் சேர்த்து கற்பிப்பவர்கள். மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி மாணவர்களை அறிவார்ந்தவர்களாக மாற்ற வேண்டும், அறிவார்ந்த தகவல்கள் கொட்டிக் கிடப்பது போல் தேவையற்ற குப்பைகளும் நிறைந்துள்ளன என சென்னையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்துவரும் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
