×

காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்: வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ பங்கேற்பு

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், தொடர் காஸ் சிலிண்டர் விலையை  கண்டித்து செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திமுக மகளிர் அணியினர்  1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்துக்கு செங்கல்பட்டு திமுக நகர செயலாளர் நரேந்திரன் ஏற்பாடு செய்தார். தொகுதி  திமுக மகளிர் அணி சார்பில், தொடர் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. காஞ்சி வடக்கு மாவட்ட திமுக மகளிரணி துனை அமைப்பாளர் மீரா சபாபதி தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் சந்தியா, கலாவதி, லலிதா, விஜயலட்சுமி, இந்திரா, ஜான்சிராணி, கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டார்.

இதில் 1000க்கும்  மேற்பட்டோர்  கலந்து கொண்டு மத்திய, மாநில அரசை கண்டித்து, சிலிண்டர் விலையை உயர்த்தாதே. ஏழைகள் வயிற்றில் அடிக்காதே என கோஷமிட்டனர். நகர செயலாளர் நரேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தண்டபாணி, ஆராமுதன், நிர்வாகிகள் ஆப்பூர் சந்தானம், அருள்தேவி, ராஜி, சிலம்புசெல்வன், சந்தோஷ், சீனுவாசன், சந்துரு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த  மகளிரணி நிர்வாகிகள்    ஏராளமானோர் கலந்துகொண்டனர். மதுராந்தகம்: மதுராந்தகம் தேரடி தெருவில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மதுராந்தகம் திமுக நகர செயலாளர் குமார் வரவேற்றார். எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் புகழேந்தி, எழிலரசன், ஆர்.டி.அரசு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி, துணை அமைப்பாளர் மலர்விழி குமார் உள்பட திமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர்.

திருப்போரூர்: திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், திருப்போரூர் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஈஸ்வரி தலைமை தாங்கினார். திருப்போரூர் வடக்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் சத்யா வரவேற்றார். தெற்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் சசிகலா, துணை அமைப்பாளர் சூர்யா, திருப்போரூர் நகர மகளிர் அணி அமைப்பாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ இதயவர்மன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.திமுக தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் யுவராஜ், மாவட்டத் துணை செயலாளர்கள் விஸ்வநாதன், அன்புச்செழியன், திருப்போரூர் நகர செயலாளர் தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருப்போரூர் நகர மகளிர் அணி அமைப்பாளர் ரீட்டா நன்றி கூறினார்.

Tags : women ,DMK ,gas cylinder price hike ,Varalakshmi Madhusoodanan MLA ,
× RELATED தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து...