கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலர் கைதை கண்டித்து பெரியகுளத்தில் முற்றுகை போராட்டம்

பெரியகுளம், டிச. 22: கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா தேசிய பொதுச்செயலாளர் ரவூப் ஷெரீப்பை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அமலாக்கத்துறை கைது செய்ததை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும், பெரியகுளத்தில் வடகரை பழைய பஸ்நிலையத்தில் உள்ள தொலை தொடர்பு அலுவலகத்தை ‘கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா’ தேனி மாவட்ட செயலாளர் முஹம்மது ஆஷிக் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், சிஏஏ-என்ஆர்சிக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதற்காக கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தலைவர்கள் வேட்டையாடுப்படுகின்றனர். பொதுச்செயலாளர் ரவூப் ஷெரீப்பை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோஷம் போட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: