ஆட்டோ டிரைவர்களுக்கு விதிமுறை கையேடு வழங்கல்

பெரியகுளம், டிச. 22: பெரியகுளம் தனியார் மண்டபத்தில் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் ஆட்டோ டிரைவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய டிஎஸ்பி முத்துக்குமார், ‘ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் கட்டாயம் சீருடை அணிய வேண்டும். மது அருந்தி ஆட்டோ ஓட்டக்கூடாது; மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சாதிய மோதலை தூண்டும் வகையில் ஆட்டோக்களில் எழுதி உள்ள வாசகங்களை அகற்ற வேண்டும். அனைத்து ஆட்டோ டிரைவர்களும் அந்தந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் அவர்களின் புகைப்படம் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முழு விபரத்தை தெரிவித்து காவல்துறையினரால் வழங்கப்படும் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும் என கூட்டத்தில் தெரிவித்தார். இதை தொடர்ந்து ஆட்டோ சங்க நிர்வாகிகளுக்கு ஆட்டோ டிரைவர்கள் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய விதி முறை அடங்கிய கையேடு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் பகுதியில் உள்ள காவல்நிலைய ஆய்வாளர்கள் சுரேஷ், சுகுமாறன், ஜோதிபாபு, எஸ்.ஐ.மணிகண்டன் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>