×

வயிற்றுவலியால் அவதி சாணப்பொடியை கரைத்துகுடித்து பெண் தற்கொலை

அரவக்குறிச்சி, செப்.19: அரவக்குறிச்சி அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் சாணப்பொடியை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மனைவி முத்துலட்சுமி (50). இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் விரக்தியடைந்த அவர் கடந்த 16ம்தேதி வீட்டிலிருந்த சாணப் பொடியை கரைத்து குடித்ததால் சிறிது நேரத்தில் மயங்கினார். அருகிலிருந்தவர்கள் மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Aravakurichi ,Muthulakshmi ,Kalimuthu ,Andipatti ,Aravakurichi, Karur district ,
× RELATED அதிகாரிகள் அதிரடி நில மேலாண்மை சுண்ணாம்புச்சத்து அதிகரிக்க ஆலோசனை