×

ஆணவக் கொலை-சுர்ஜித் உறவினர் மனு ஒத்திவைப்பு

நெல்லை: கவின் ஆணவக் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய சுர்ஜித்தின் உறவினர் ஜெயபாலன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜெயபாலன் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நெல்லை சிறப்பு நீதிமன்ற நீதிபதி, 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். வழக்கில் கைதான சுர்ஜித் தந்தையான எஸ்.ஐ. சரவணனின் ஜாமின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Tags : Surjith ,Nellai ,Jayapalan ,Nellai District Atrocities Prevention Court ,Nellai Special Court ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...