×

காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் கும்மியடித்து போராட்டம்

மன்னார்குடி, டிச. 22: கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோட்டூரில் இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் கும்மியடித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரங்களை இழந்து கடும் பொரு ளாதார நெருக்கடியில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் வேதனையில் இருந்து வருகின்றனர். தற்போது அதிலிருந்து அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கடந்த 15 நாட்களில் மத்திய அரசு இரண்டு முறை உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிப் படைந்து உள்ளனர். இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வால் இல்லத்தரசி களும், அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள் ளது.
கேஸ் விலை உயர்வால் சாமானிய மக்கள் சிலிண்டர் வாங்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால், கிராமப்புறங்களில் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஏழை எளிய நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும் சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தி திமுக மகளிரணி சார்பில் தமிழகம் முழு வதும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோட்டூர் கடை வீதியில் இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் பாஜக அரசாங்கத்தைக் கண்டித்து கும்மியடித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், உயர்த்தப்பட்ட விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன் ஒன்றிய செயலாளர் பவானி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் கோதாவரி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நகர குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல முத்துப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாதா் சங்க ஒன்றிய செயலாளா் பூமா தலைமை வகித்தார். இதில் ஒன்றிய பொருளாளா் பரமேஸ்வாி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் பாிமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

Tags : Mather ,union protests ,gas cylinder price hike ,
× RELATED ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இருசக்கர வாகன பேரணி