×

மரிகோ குழுமத்தில் வருமான வரி சோதனை

மும்பை: மகாராஷ்டிராவில் மரிகோ குழுமத்தின் பல்வேறு வணிக வளாகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். மகாராஷ்டிராவில் உள்ள மரிகோ குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து மும்பையில் அந்த குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். குழுமத்திற்கு சொந்தமான பல்வேறு வணிக வளாகங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. வரி ஏய்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக நிறுவனத்தின் நிதி ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வருமான வரித்துறை சோதனை தொடர்பாக நிறுவனத்தை உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.

Tags : Marico Group ,Mumbai ,Maharashtra ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது