×

பல லட்சம் ரூபாய் மதிப்புடையவை ம.பி. சுரங்கத்தில் 1.48 காரட் எடை கொண்ட வைரங்கள் கண்டுபிடிப்பு

பன்னா: மத்தியபிரசேத்தில் சுரங்கத்தில் இருந்து விலை மதிப்பற்ற மூன்று வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மத்தியபிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள ராஜ்பூரை சேர்ந்தவர் வினிதா கோண்ட். பழங்குடியின பெண்ணான இவர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பதி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது விலை மதிப்பற்ற மூன்று வைரங்களை கண்டுபிடித்தார். இதுகுறித்து உடனே மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பன்னா மாவட்ட வைர அதிகாரி அனுபம் சிங் கூறுகையில், “கண்டுபிடிக்கப்பட்ட வைரமொத்தம் 1.48 காரட் எடையும், 20 மற்றும் 7 சென்ட் எடையும் கொண்டவை. இந்த மூன்று வைரங்களில் ஒன்று ரத்தின தரம் உடையது. மற்றவை இரண்டும் சற்று தாழ்ந்த தரம் உடையவை. இந்த மூன்று வைரங்களும் ஏலத்தில் விடப்படும். அப்போதுதான் அந்த வைரங்களின் உண்மையான விலை தெரிய வரும்” என்றார்.

Tags : BANNA ,Madhya Pradesh ,Vinita Kond ,Rajpur ,Banna district ,Patti ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...